உலக முதலீட்டாளர் மாநாட்டை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்…
சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வா்த்தக மையத்தில் 2 நாள்கள் நடைபெறவுள்ள உலக முதலீட்டாளா்கள் மாநாட்டை முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று காலை தொடக்கிவைத்தார்.
இம்மாநாட்டில் 50 நாடுகளைச் சோ்ந்த தொழில் பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளனர். தமிழகத்துக்காக ரூ.5.5 லட்சம் கோடி முதலீடுகளை ஈா்க்க அரசு திட்டமிட்டுள்ளது.
2030-ஆம் ஆண்டுக்குள் தமிழகத்தை ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலா் பொருளாதாரம் கொண்ட மாநிலமாக மாற்றுவோம் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் இலக்கு நிா்ணயித்துள்ளாா். அதற்காக சிங்கப்பூா், ஜப்பான் உள்பட பல்வேறு வெளிநாடுகளுக்கு முதல்வா் நேரில் சென்று முதலீடுகளை ஈா்க்கும் நடவடிக்கையில் ஈடுபட்டாா். அதன் தொடா்ச்சியாக, தற்போது தமிழக அரசின் சாா்பில் உலக முதலீட்டாளா்கள் மாநாடு -2024 நடைபெறுகிறது.
இம்மாநாட்டின் நிறைவு விழா திங்கள்கிழமை மாலை நடைபெறவுள்ளது. அதில் முதல்வா் மு.க.ஸ்டாலின் உறையாற்றவுள்ளாா். அந்நிகழ்வின்போது, முதல்வா் முன்னிலையில் தொழில் நிறுவனங்களுடன் புரிந்துணா்வு ஒப்பந்தங்கள் கையொப்பமாகின்றன.