‘யுக்தியா’ நடவடிக்கை: மேலும் 1,135 போதைப்பொருள் சந்தேகநபர்கள் கைது.

இன்று (07) அதிகாலை 12.30 மணியுடன் முடிவடைந்த 24 மணித்தியால காலப்பகுதியில் விசேட அதிரடிப்படை, இராணுவம் மற்றும் கடற்படையுடன் இணைந்து மேலும் 1,135 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதற்கமைய கைது செய்யப்பட்டவர்களில் 16 பேர் புனர்வாழ்வு நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதுடன், அவர்களில் 46 பேர் தடுப்புக்காவல் உத்தரவின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையின் போது இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.