யாழ். வந்த ஜனாதிபதி ரியோவில்ஐஸ் கிரீம் சுவைக்கவும் மறக்கவில்லை! – வடக்கின் திறமைசாலிகளுக்கும் பாராட்டு.

யாழ்ப்பாணம் வந்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, ரியோ ஐஸ் கிரீம் விற்பனை நிலையத்துக்கு விஜயம் செய்து ஐஸ் கிரீம் சுவைக்கவும் மறக்கவில்லை.
அங்கு meet and greet என்ற தொனிப்பொருளில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்விலும் ஜனாதிபதி கலந்துகொண்டார்.
வடக்கு மாகாணத்தில் கல்வி, விளையாட்டு, நாடகம் மற்றும் திரைப்படக் கலை, சமூக ஊடகங்கள் போன்ற துறைகளில் திறமை செலுத்தியோர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.
திறமைசாலிகளைப் பாராட்டி வாழ்த்துத் தெரிவித்த ஜனாதிபதி, அவர்களுடன் சிநேகபூர்வ உரையாடலிலும் ஈடுபட்டார்.