1,500 பரத நாட்டிய கலைஞர்களின் பங்கேற்புடன் கிழக்கில் 1008 பானைகள் வைத்து இன்று மாபெரும் பொங்கல் விழா
1008 பொங்கல் பானைகள் வைக்கப்பட்டு,1,500 பரத நாட்டிய கலைஞர்களின் பங்கேற்புடன், 500 கோலங்களுடன் பொங்கலை வரவேற்கும் முகமாக மாபெரும் பொங்கல் திருவிழா இன்று திருகோணமலையில் நடைபெற்றது.
கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் ஏற்பாட்டில் இந்தப் பொங்கல் திருவிழா இடம்பெற்றது.
இலங்கை வரலாற்றில் இம்முறையே இவ்வாறு பிரமாண்டமாக பொங்கல் விழா நடத்தப்பட்டுள்ளது.
பொங்கல் விழாவை முன்னிட்டு நேற்றுமுன்தினம் ஜல்லிக்கட்டு போட்டியை கிழக்கு ஆளுநர் நடத்தி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.