விமானப் அதிகார சபையின் பெண் ஊழியரை வெட்டிக் கொன்ற நபர் அடையாளம் காணப்பட்டுள்ளார்

ஹொரண : தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் கஹதுடுவ சந்தியில் இன்று பிற்பகல் சிவில் விமான சேவைகள் அதிகார சபையின் பெண் ஊழியர் ஒருவர் வாளால் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அலுவலக போக்குவரத்து சேவைக்கு சொந்தமான வாகனத்தில் கஹதுடுவ நுழைவாயிலில் இருந்து பஸ்ஸில் தனது வீட்டிற்கு செல்வதற்காக சென்று கொண்டிருந்ததாக விசாரணைகள் தெரிவிக்கின்றன.
அலுவலக போக்குவரத்து சேவைக்கு சொந்தமான வாகனத்தில் தினம் தோறும் அலுவலகத்திற்கு சென்று கொண்டிருந்த அவர் , கஹதுடுவ நுழைவாயிலில் இருந்து பேருந்தில் தனது வீட்டிற்கு செல்வதற்காக , நெடுஞ்சாலை வாசலில் இருந்து இறங்கிய போது, வீதியில் காத்திருந்த நபர் ஒருவர் கழுத்தை வாளால் வெட்டியுள்ளதாக விசாரணைகளின் மூலம் தெரிய வந்துள்ளன.
படுகாயமடைந்த பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் போதே உயிரிழந்திருந்தாக வைத்தியசாலை வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.
ஹொரண பிரதேசத்தில் பிரபல வைத்தியர் ஒருவரின் மனைவியான 39 வயதுடைய ஒரு குழந்தையின் தாயே உயிரிழந்துள்ளார்.
கொலையாளி மற்றும் கொலைக்கு பயன்படுத்திய கார் அடையாளம் காணப்பட்டுள்ளதாக புலனாய்வு திணைக்களம் தெரிவித்துள்ளது. கொலையாளி அனுராதபுரத்தில் பதிவு செய்யப்பட்ட வாகனத்தில் வந்துள்ளார். கொலையாளி என சந்தேகிக்கப்படும் நபர் கொழும்பில் உள்ள பிரபல பல்பொருள் அங்காடியில் விசா ஆலோசனை சேவையை நடத்தும் நபர் எனவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
Ssh ஜே