விமானப் அதிகார சபையின் பெண் ஊழியரை கொன்றவர் விமான நிலையத்தில் கைது
கஹதுடுவ : நேற்று (10) கஹதுடுவ கஹதுடுவ அதிவேக நெடுஞ்சாலை வெளியேறும் பிரதான வீதிக்கு அருகில் சிவில் விமான சேவை அதிகாரசபை பெண் ஊழியரின் , கொலையாளி நேற்று வெளிநாடு செல்ல முற்பட்ட போது விமான நிலைய பொலிஸ் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொலையின் பின்னர், இரவு 10.35 மணியளவில் வெளிநாட்டுக்கு செல்வதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த போது பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.
கட்டுநாயக்க சிவில் விமான சேவைகள் அதிகார சபையில் பணிபுரியும் துலாஞ்சலி அனுருத்திகா மாப்பிட்டியகே என்ற 41 வயதுடைய ஒரு பிள்ளையின் தாயாரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
கொழும்பு பம்பலப்பிட்டியில் உள்ள பிரபல வர்த்தக நிலையமொன்றில் அலுவலகம் நடத்தி விசா ஆலோசனைச் சேவைகளை வழங்கும் எல்லாவல லியனகே டன்ஸ்டன் பிரசாத் பெரேரா என்பவரால் அவர் கொல்லப்பட்டார்.
இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர், வெளிநாட்டில் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டு வரும் எல்லாவல லியனகே தர்மசிறி பெரேரா என்றழைக்கப்படும் தர்மசிறியின் மூத்த சகோதரர் எனவும் விசாரணைகள் தெரிவிக்கின்றன.