ஐஸ் வைத்திருந்த யாழ் போலீஸ் , திருகோணமலையில் கைது!
யுக்திய மெகெயும நடவடிக்கையின் போது ஐஸ் போதைப்பொருள் வைத்திருந்ததாக பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
திருகோணமலை – குச்சவெளி பொலிசார் நேற்று (10) கைது செய்த கான்ஸ்டபிள் , யாழ்ப்பாணம் – கோப்பாய் பொலிஸில் கடமையாற்றுவதாக அறிவித்துள்ளனர் .
அவரிடம் இருந்து 50 கிராம் ஐஸ் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.