கோயிலில் திருமணம் செய்துகொண்ட தன்பாலின ஈர்ப்பாளர்கள்!

உத்தரப் பிரதேசம் டியோரியாவில் உள்ள கோயிலில் இந்துமத முறைப்படி தன்பாலின ஈர்ப்பாளர்கள் இருவர் திருமணம் செய்துகொண்டுள்ளனர். இசைக்குழு ஒன்றில் பணியாற்றி வந்த ஜெயஸ்ரீ ராகுல் மற்றும் ராக்கி தாஸ் என்ற இரு பெண்களும் காதலித்து திருமணம் செய்துகொண்டுள்ளனர்.
திருமணத்திற்கான பிரமாண பத்திரத்தை தயார் செய்து பின்னர் பாகதா பவானி கோயிலில் திருமணம் செய்துகொண்டதாக அவர்கள் பணிபுரிந்த இசைக்குழுவின் தலைவர் முன்னா பால் தெரிவித்துள்ளார்.
சிலநாள்களுக்கு முன்னர் திர்கேஸ்வர்நாத் கோயிலில் இவர்களுக்கு திருமணம் செய்துகொள்ள அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் மாவட்ட அதிகாரிகள் பலரும் அனுமதி அளிக்கவில்லை எனக் கூறப்படுகிறது.
அதன் பின்னர் திருமணப் பிரமாணத்தைத் தயார் செய்து, பாகதா பவானி கோயிலில் திருமணம் செய்துகொண்டுள்ளனர்.