நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்றார் வாசலதிலக.

ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினரான நயன வாசலதிலக, சபாநாயகர் முன்னிலையில் நாடாளுமன்ற உறுப்பினராக இன்று உறுதியேற்றார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவி வகித்த சமிந்த விஜேசிறி அப் பதவியை இராஜிநாமா செய்தார்.
இதையடுத்த கடந்த தேர்தலில் விருப்பு வாக்குப் பட்டியலில் அடுத்த இடத்தில் இருந்த நயன வாசலதிலக எம்.பியாகப் பதவியேற்றுள்ளார்.