நேபாளத்தில் இடம்பெற்ற பஸ் விபத்தில் 12 பேர் பலி.

நேபாளத்தில் இடம்பெற்ற பஸ் விபத்தில் இரண்டு இந்தியர்கள் உள்ளிட்ட 12 பேர் உயிரிழந்தனர் என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
நேபாள நாட்டின் டாங் மாவட்டம் நேபாள் கஞ்சில் இருந்து காத்மாண்டு நோக்கி பஸ் ஒன்று பயணித்துக்கொண்டிருந்தது.
அப்போது திடீரென கட்டுப்பாட்டை இழந்த அந்த பஸ் பாலத்தில் இருந்து ராப்தி என்ற ஆற்றுக்குள் கவிழ்ந்தது.
இந்த கோர விபத்தில் 2 இந்தியர்கள் உள்ளிட்ட 12 பேர் உயிரிழந்தனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 22 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
பலியானவர்களில் 8 பேரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
இந்த விபத்து பற்றி தகவல் அறிந்த அந்த நாட்டின் பொலிஸார் மற்றும் மீட்புக்குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, விபத்தில் காயமடைந்தவர்களை மீட்டு நேபாள் கஞ்சில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
மேலும் பொலிஸார், இறந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.