அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் யாழ் அரச அதிபரை சந்தித்தனர்.
யாழ் மவட்ட அரசாங்க அதிபரை வடமாகாண அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சங்க அங்கத்தவர்கள் யாழ் மாவட்ட செயலகத்தில் சந்தித்து கலந்துரையாடினர்.
அதன் போது மிக நீண்டகாலமாக யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிமாவட்டங்களுக்கு சென்று கடமையாற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் எதிர்நோக்கும் இடமாற்ற பிரச்சினை தொடர்பாக விரிவாக கலந்துரையாடப்பட்டது.
அதாவது மாவட்ட நிர்வாக எல்லை கடந்து தேசிய ரீதியாக மேற்கொள்ளப்பட வேண்டிய இடமாற்ற கொள்கையின் அடிப்படையில் தீர்க்கப்பட வேண்டிய இந்த பிரச்சினைக்கு தன்னாலான ஒத்துழைப்புக்களை வழங்குவதாக அரச அதிபர் உறுதியளித்ததோடு, எமது வேண்டுகோளின் அடிப்படையில் இப்பிரச்சினை தொடர்பாக ஓர் இடமாற்ற கொள்கையொன்று வகுக்கப்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி சில பரிந்துரைகளை தேசியமட்டத்தில் மேற்கொள்வதாக தெரிவித்தார்.
அத்துடன் குறித்த இடமாற்ற பிரச்சினைகளை எவ்வாறான வழிவகைகளில் எம்போன்ற தொழிற்சங்கங்கள் கையாள வேண்டுமெனவும் ஆலோசனை வழங்கினார்.
தொடர்ந்து யாழ்மாவட்ட ரீதியாக அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டபோது சுட்டிக்காட்டிய விடயங்கள் தொடர்பாக தான் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வதாக உறுதியளித்தார்.