சென்னைக்கு வருகிறது புல்லட் ரயில்; மைசூர் வரை செல்லலாம்!
நாட்டின் 2வது புல்லட் ரயில் சென்னை – மைசூரு இடையே இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் 2026ல் முதல் புல்லட் ரயில் இயக்குவதற்கான பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. மும்பை முதல் ஆமதாபாத் வரையிலான வழித்தடத்தில் முதல் புல்லட் ரயில் இயக்கப்பட உள்ளதால் பொதுமக்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். அதற்குள் அடுத்த புல்லட் ரயில் குறித்த சிறப்பான செய்தி வெளியாகியுள்ளது. நாட்டின் 2வது புல்லட் ரயில் வழித்தடத்தில் தமிழகமும் இணைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை – மைசூர் இடையே இந்த 2வது புல்லட் ரயில் திட்டம் துவங்கப்படும் என அறிவிக்கப்பட்டு, அதற்கான ‘ரூட் மேப்’ தற்போது வெளியாகியுள்ளது. மொத்தம் 435 கி.மீ தூரத்தை கொண்டுள்ள இந்த வழித்தடத்தில் இயக்க திட்டமிட்டுள்ள புல்லட் ரயில் அதிகபட்சம் 350 கி.மீ வேகத்தில் இயங்கும் எனக் கூறப்படுகிறது. சென்னை, பெங்களூர், மைசூர் என முக்கியமான 9 நிறுத்தங்களை கொண்டுள்ளது. விரைவில் இதற்கான செயல்திட்டத்தை மத்திய அரசு தீவிரப்படுத்த உள்ளது.