வீதியினை மூடியதற்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

வவுனியாவில் பிரபல பாடசாலை ஒன்றிற்கருகில் உள்ள வீதியை மூடியதால் குழப்பம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயத்தின் கனிஷ்ட பாடசாலைக்கு பிள்ளைகளை கொண்டு செல்லும் பெற்றோர், மாணவர்களை இறக்கிய பின்னர் வெளியே செல்லும் போது மாற்று வழியைப் பயன்படுத்தி வருகின்றனர்.
அவ்வாறு பயன்படுத்துகின்ற மாற்று வழி அரச விடுதிகளின் அருகாமையில் உள்ளது எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
ஆகவே அவ்வழியூடாக வாகனங்கள் பயணிப்பதால் தமக்கு அசௌகரியம் ஏற்படுவதாக தெரிவித்து அங்கு வசிக்கும் ஒருவர், வீதியை மூடி போக்குவரத்தை தடை செய்துள்ளார்.
இதனால் பல மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் பெரும் அசெளகரியத்திற்குள்ளாகியதுடன், குறித்த பகுதியில் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டிருந்தது.
இதனையடுத்து அப்பகுதியில் ஒன்றுகூடிய பெற்றோர்கள், வீதியினை மூடியதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் குழப்பமான சூழல் காணப்பட்டிருந்தது.
பின்னர் பெற்றோர்களது வேண்டுகோளிற்கிணங்க வீதி திறக்கப்பட்டது. பின்னர் நிலமை சுமூகமாகியது எனவும் தெரிவிக்கப்படுகின்றது.