வெளிநாட்டவர்களுக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தில் சாரதி அனுமதிப்பத்திரம் வழங்கும் திட்டம்

வருடாந்தம் 3,500 வெளிநாட்டவர்கள் வெரஹெர அலுவலகத்திற்கு சாரதி அனுமதிப்பத்திரங்களை பெற்றுக் கொள்வதற்காக வருகை தருவதாக தெரிவிக்கப்படுகிறது.
இவர்களுக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து சாரதி அனுமதிப்பத்திரம் வழங்கும் வேலைத்திட்டம் ஏப்ரல் மாதத்திற்குள் ஆரம்பிக்கப்படும் என போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண தெரிவித்துள்ளார்.
நிலையான நாட்டிற்கு ஒரு வழி என்ற தொனிப்பொருளில் ஜனாதிபதி ஊடக மையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.