முல்லைத்தீவு கடற்கரையில் இந்திய மீனவர் என சந்தேகிக்கப்படும் சடலம் ஒன்று கரையொதுங்கியுள்ளது.

முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் கடற்கரையில் இந்திய மீனவர் என சந்தேகிக்கப்படும் சடலம் ஒன்று நேற்று (19) கரையொதுங்கியுள்ளது. இவரின் மார்பில் தெலுங்கு மொழி எழுத்துக்கள் இருப்பதால் அவர் இந்திய மீனவர் என நம்பப்படுகிறது.
சடலம் கடற்கரையில் ஒதுங்கியதை கண்ணுற்ற முல்லைத்தீவு மீனவர்கள் , இராணுவ முகாம் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
பொலிஸார் முள்ளிவாய்க்கால் பகுதிக்கு வந்ததையடுத்து, சடலம் விசாரணைக்காக முல்லைத்தீவு வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதுடன், சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய பிரதி உயர்ஸ்தானிகர் அலுவலகத்திற்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.