அணிசேரா அமைப்பின் மாநாட்டில் பாலஸ்தீன விடுதலைக்காகக் குரல் கொடுத்த ரணில்!
“ஐக்கிய நாடுகள் சபைக்குள் காணப்படும் யோசனைகள் மற்றும் இந்த மாநாட்டின் முன்மொழிவுகளுக்கு அமைய, மேற்குக் கரை, காஸா பகுதி மற்றும் கிழக்கு ஜெருசலேம் ஆகிய பகுதிகள் பாலஸ்தீனத்தின் ஒரு பகுதியாக அங்கீகரிக்கப்பட வேண்டும்.”
இவ்வாறு உகாண்டாவின் கம்பாலாவில் (19) நடைபெற்ற அணிசேரா அமைப்பின் 19ஆவது அரச தலைவர் மாநாட்டில் உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சுட்டிக்காட்டினார்.
மேலும், காஸா பகுதியின் இன அமைப்பு மாறக்கூடாது எனவும், ஐந்து வருடங்களுக்குள் பாலஸ்தீன அரசு ஸ்தாபிக்கப்பட வேண்டும் எனவும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.