சந்திரயான்-3 விண்கலத்துடன் தொடர்பை ஏற்படுத்திய நாசா விண்கலம்!
நிலவில் உள்ள சந்திரயான்-3 விண்கலத்தின் விக்ரம் லேண்டருடன் நாசா விஞ்ஞானிகள் தொடர்பை ஏற்படுத்தியுள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 23ஆம் தேதி நிலவின் தென் துருவப் பகுதியில் சந்திரயான்-3 விண்கலம் வெற்றிகரமாக தரையிறங்கியது. அதில் உள்ள விக்ரம் லேண்டரும், பிரக்யான் ரோவரும் 15 நாட்கள் ஆய்வு செய்த நிலையில், நிலவில் இரவு தொடங்கியதால் அணைத்து வைக்கப்பட்டன. நிலவின் மீண்டும் பகல் தொடங்கிய போது, விக்ரம் லேண்டருடன் தொடர்பை ஏற்படுத்தும் முயற்சியில் இஸ்ரோ விஞ்ஞானிகள் ஈடுபட்டனர். எனினும், அந்த முயற்சி பலனளிக்கவில்லை.
இந்நிலையில், அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசாவின் எல்.ஆர்.ஓ விண்கலம், கடந்த டிசம்பர் மாதம் 12-ஆம் தேதி தென் துருவத்தை கடந்து சென்ற போது, விக்ரம் லேண்டரில் உள்ள எல்.ஆர்.ஏ. என்ற லேசர் கருவியுடன் தொடர்பை ஏற்படுத்தியது.
நாசாவின் விண்கலம் அனுப்பிய லேசர் சிக்னலுக்கு, விக்ரம் லேண்டரில் இருந்து பிரதிபலிப்பு சிக்னல் வந்ததாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. இதன் மூலம், தென் துருவத்தில் இடத்தை குறிப்பிடும் அடையாளமாக விக்ரம் லேண்டர் மாறியுள்ளது. அதில் உள்ள லேசர் கருவியான எல்.ஆர்.ஏ. 10 ஆண்டுகள் வரை செயல்படக் கூடியது என இஸ்ரோ தெரிவித்துள்ளது.
மேலதிக செய்திகள்
தமிழரசின் தலைவிதி திருமலையில் இன்று நிர்ணயம்!
தேர்தலை இலக்காகக் கொண்டு அமைச்சரவையில் அதிரடி மாற்றம்! – ‘மொட்டு’வில் பலருக்குப் பதவிகள்.