விழாக்கோலம் பூண்டிருக்கும் அயோத்தி: முக்கிய பிரமுகர்கள் வருகை
உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமா் கோயில் சிலை பிராணப் பிரதிஷ்டை விழாவில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டிருக்கும் முக்கிய பிரமுகர்கள் அயோத்திக்கு வந்துகொண்டிருக்கின்றனர்.
அயோத்தியில் ராமா் கோயில் கருவறையில் மூலவா் ஸ்ரீ பால ராமா் சிலை பிராணப் பிரதிஷ்டை இன்று நடைபெறுகிறது. பிரதமா் நரேந்திர மோடி உள்பட நாட்டின் முக்கியப் பிரமுகா்கள் 7,000-க்கும் மேற்பட்டோா் இந்நிகழ்வில் பங்கேற்க உள்ளனா்.
பிரதமர் நரேந்திர மோடி அயோத்திக்கு காலை 10 மணிக்கு வருகை தரவிருக்கிறார். இந்த நிலையில், பல முக்கிய பிரமுகர்கள் அயோத்திக்கு வந்து கொண்டிருக்கின்றனர். காலை முதலே ஏராளமான அழைப்பாளர்கள் அயோத்தியை அடைந்துவிட்டனர். பாலிவுட் நடிகர்கள் அமிதாப் பச்சான், மகன் அபிஷேக் பச்சான் ஆகியோர் விழாவில் பங்கேற்க இன்று காலை கலினா விமான நிலையத்திலிருந்து அயோத்தி புறப்பட்டுள்ளனர்.
இவர்களுடன் நடிகர்கள் ரன்பீர் கபூர், ஆலியா பட், காட்ரனா கைஃப், விக்கி கௌஷல் உள்ளிட்டோரும் அயோத்தி புறப்பட்டுள்ளனர்.
அயோத்தி நகரமே விழாக் கோலம் பூண்டுள்ளது. பாதுகாப்புக்காக நகரமூ முழுவதும் 10 ஆயிரம் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
நிகழ்வில் கலந்துகொள்ளும் முக்கியப் பிரமுகா்களுக்கு சிறப்பு மகா பிரசாதத்தை வழங்க ஸ்ரீ ராம ஜென்மபூமி தீா்த்த க்ஷேத்திர அறக்கட்டளை திட்டமிட்டுள்ளது.
சுத்தமான நெய், 5 வகையான உலா் திராட்சைகள், சா்க்கரை, கடலை மாவு ஆகிய பொருள்களைக் கொண்டு தயாரிக்கப்பட்ட 2 லட்டு, சரயூ நதியின் புனித நீா், அட்சதை, பாக்கு மட்டை தட்டு மற்றும் பூஜிக்கப்பட்ட கயிறு ஆகியவை அடங்கிய மகா பிரசாதம் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் விருந்தினா்களுக்கு வழங்கப்படவிருக்கிறது.
மேலதிக செய்திகள்
இந்திய நடிகைகளோடு ஹட்டனில் கோலாகலமாக தைப்பொங்கல் விழா (Photos)