பெலியத்தவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஐவர் உயிரிழந்துள்ளனர்.

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் பெலியத்த இடைமாற்றுக்கு அருகில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் குறைந்தது ஐந்து பேர் கொல்லப்பட்டனர்.
நான்கு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகவும், மற்றொருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது.
இன்று காலை 7.45 மணியளவில் பிராடோ ரக வாகனத்தில் வந்த குழுவினர் டிஃபென்டர் ஜீப்பில் வந்த மற்றுமொரு குழுவினர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.
பாதாள உலகக் குற்றவாளியான கொஸ்கொட சுஜீயின் கும்பலே இந்த துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்டுள்ளதாக பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.