சிரியா தலைநகர் மீது நடத்தப்பட்ட ஏவுகணை தாக்குதலில் 5 ஈரான் ராணுவ ஆலோசகர்கள் கொல்லப்பட்டனர்.

சிரியாவின் தலைநகர் டமாஸ்கஸ் மீது இஸ்ரேல் நடத்திய ஏவுகணை தாக்குதலில் ஐந்து ஈரானிய ராணுவ ஆலோசகர்கள் உட்பட சிரிய ராணுவ அதிகாரிகள் குழு கொல்லப்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இறந்தவர்களில் ஈரானின் உயர்மட்ட உளவுத்துறை தலைவரும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற இந்த தாக்குதலில் பல கட்டிடங்கள் மற்றும் வாகனங்கள் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும் இடிந்து விழுந்த கட்டிடங்களுக்கு மத்தியில் புதையுண்ட இராணுவ வீரர்களை தேடும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், இந்த ஏவுகணை தாக்குதல் தொடர்பில் இஸ்ரேல் இதுவரை எவ்வித அறிக்கையும் வெளியிடவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், தனது இராணுவ ஆலோசகர்கள் இஸ்ரேலிய ஏவுகணைத் தாக்குதலால் கொல்லப்பட்டதாக ஈரானிய ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி எச்சரித்துள்ளதாகவும், பொறுப்பான தரப்பு உடனடியாக பதிலளிப்பதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஈரான் இராணுவத்தின் ஆலோசகர்கள் தங்கியிருந்த கட்டிடத்தை இலக்கு வைத்து 4 ஏவுகணைத் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாகவும், நான்கு மாடிகளைக் கொண்ட கட்டிடம் முற்றாக அழிக்கப்பட்டதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் மேலும் தெரிவித்துள்ளன.