நாரம்மல சம்பவம் குறித்து அமைச்சர் திரன் அலஸ் கண்டனம்.

நாரம்மல பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தின் குற்றவாளிகளுக்கு எதிராக துரிதமான கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் திரன் அலஸ் தெரிவித்துள்ளார்.
தனது எக்ஸ் கணக்கில் ஒரு குறிப்பை வைத்துள்ள அமைச்சர், இந்த சம்பவத்தை கண்டிப்பதாக கூறினார்.
சம்பவத்தில் உயிரிழந்த திரு.ரொஷான் குமாரதிலகவின் குடும்பத்தினருக்கு அனுதாபங்களை தெரிவிப்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.