அமெரிக்க அதிபர் தேர்தலில் இருந்து ரான் டிசாண்டிஸ் வெளியேறினார்.
அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் அதிபர் வேட்பாளர் ரோன் டிசாண்டிஸ் விலக முடிவு செய்துள்ளதாக ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
புளோரிடா கவர்னர் ரான் டிசாண்டிஸ், 2024-ம் ஆண்டு அதிபர் தேர்தலில் இருந்து விலகி, டொனால்ட் டிரம்பை ஆதரிப்பதற்கு முடிவு செய்துள்ளார்.
நியூ ஹாம்ப்ஷயரில் குடியரசுக் கட்சியின் பிரைமரி தேர்தலுக்கு முன்னதாக அவர் விலகிக் கொண்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
டிசாண்டிஸ் குடியரசுக் கட்சியில் வலுவான போட்டியாளராகக் கருதப்பட்டார். எனினும், வெற்றிக்கான தெளிவான பாதை இல்லை என நேற்று அவர் தெரிவித்தார்.
இதற்கிடையில், டிரம்ப் கட்சியின் கடைசி சவாலான நிக்கி ஹேலி, அமெரிக்க ஜனாதிபதி ஜோ பிடனை தோற்கடிக்கக்கூடிய ஒரே வேட்பாளர் தான் என்று கூறினார்.