‘உலகிலேயே மிகவும் அதிர்ஷ்டசாலி நான்தான்’ – ராமர் சிலையை வடிவமைத்த சிற்பி நெகிழ்ச்சி!
நான் கனவு உலகில் இருப்பது போல் உணர்கிறேன் என்று ராமர் சிலையை வடிவமைத்த சிற்பி தெரிவித்துள்ளார்.
உத்திர பிரதேச மாநிலம் அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக விழா நேற்று வெகு விமர்சையாக நடைபெற்றது.
இந்த விழாவில் பல்வேறு அரசியல் கட்சியினர், திரை பிரபலங்கள், விளையாட்டு பிரபலங்கள், பக்தர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். பால ராமர் பிரதிஷ்டையை தொடர்ந்து பிரதமர் மோடி தீபாராதனை காட்டி வழிபாடு நடத்தினார்.
மேலும், அங்கு பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள பால ராமர் சிலையை வடிவமைத்த சிற்பி அருண் யோகிராஜும் இந்த நிகழ்வில் பங்கேற்றார்.
அப்போது பேசிய அவர் “நான் இப்போது உலகின் மிகவும் அதிர்ஷ்டசாலியாக உணர்கிறேன். எனது முன்னோர்கள், குடும்ப உறுப்பினர்கள் மற்றும் ராமர் ஆகியோரின் ஆசி எனக்கு எப்போதும் உண்டு. சில நேரங்களில் நான் கனவு உலகில் இருப்பது போல் உணர்கிறேன். இது எனக்கு மிகப் பெரிய நாள்” என்றார்.
மேலதிக செய்திகள்
இன்று பெலியத்தவில் கொல்லப்பட்ட சமன் பெரேராவின் பின்னணி என்ன? ஏன் கொல்லப்பட்டார்?