அதிகாலை முடிவடைந்த 24 மணித்தியாலங்களில் 955 சந்தேக நபர்கள் கைது.

நாடளாவிய ரீதியில் இன்று (23) அதிகாலை முடிவடைந்த 24 மணித்தியாலங்களில் 955 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
இதன்படி, நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளில் போதைப்பொருள் குற்றங்களுடன் தொடர்புடைய 633 சந்தேக நபர்களும் குற்றப் பிரிவில் குறிப்பிடப்பட்ட பட்டியலில் இருந்த 322 சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
போதைப்பொருள் குற்றங்கள் தொடர்பில் கைது செய்யப்பட்ட 633 சந்தேக நபர்களில் 07 சந்தேகநபர்கள் தடுப்புக் காவல் உத்தரவு, 03 சட்டவிரோத சொத்து விசாரணைகள் மற்றும் 17 போதைக்கு அடிமையானவர்கள் புனர்வாழ்விற்காக பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.
பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு மற்றும் பொலிஸ் விசேட பணியகம் ஆகியவற்றின் பட்டியலில் இருந்த 28 சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும், கைது செய்யப்பட்ட 322 சந்தேக நபர்களில் குற்றப் பிரிவுக்கு பரிந்துரைக்கப்பட்டவர்களில் 42 சந்தேக நபர்கள் போதைப்பொருள் குற்றங்கள் தொடர்பான திறந்த பிடியாணைகளையும், 243 போதைப்பொருள் அல்லாத குற்றங்கள் தொடர்பான திறந்த பிடியாணைகளையும் பெற்றுள்ளனர்.
கைரேகைகள் மூலம் அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்படாத 23 சந்தேக நபர்களும், குற்றங்களுக்காக தேடப்பட்டு வந்த 14 சந்தேக நபர்களும் இந்த நடவடிக்கைகளின் போது கைது செய்யப்பட்டதாக அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.