ஈரான்-பாகிஸ்தான் கருத்து வேறுபாடுகளை பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க சீனா ஆதரவு.
ஈரான் மற்றும் பாகிஸ்தானுக்கு இடையேயான கருத்து வேறுபாடுகளை பேச்சுவார்த்தை மூலம் தீர்த்து வைப்பதை சீனா ஆதரிக்கிறது.
நேற்று (22) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே சீன வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் வாங் வென்பின் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அந்த இரு நாடுகளுடனும் சீனா கருத்துப் பரிமாற்றம் செய்து வருவதாகவும் அவர் கூறினார். இரு நாடுகளும் சீனாவின் நல்ல நண்பர்கள். பிராந்திய மற்றும் சர்வதேச அமைதியை பாதுகாப்பதில் ஈடுபட்டு வரும் சீனா, இரு நாட்டு பிரச்னைகளை பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க உதவும்.
மேலும், ஈரான் மற்றும் பாகிஸ்தானின் தேவைக்கு ஏற்ப இருதரப்பு உறவை முறைப்படுத்த சீனா உரிய நடவடிக்கை எடுக்க தயாராக இருப்பதாக வாங் வென்பின் கூறினார்.