சீனாவின் யுனான் மாகாணத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 8 பேர் உயிரிழந்தனர்.
தென் சீனாவின் யுனான் மாகாணத்தில் நேற்று ஏற்பட்ட மண்சரிவில் 8 பேர் உயிரிழந்துள்ளதுடன் 47 பேர் காணாமல் போயுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. நேற்று அதிகாலை 5.51 மணியளவில் ஏற்பட்ட இந்த மண்சரிவிற்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை எனவும், மேலும் இந்த நடவடிக்கைகளை மேற்கொண்டு காணாமல் போனவர்களை விரைவில் கண்டுபிடிக்குமாறு சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
நிலச்சரிவு ஏற்பட்ட மாகாணத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட அனர்த்த முகாமைத்துவ பணியாளர்கள் நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளதுடன், 500க்கும் மேற்பட்ட குடியிருப்பாளர்கள் மாகாணத்தில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
காணாமல் போனவர்களில் பெரும்பாலானவர்கள் சிறுவர்கள் மற்றும் பெரியவர்கள் என பிரதேசவாசிகள் குறிப்பிட்டுள்ளதுடன், நிலச்சரிவு நிலநடுக்கம் போன்று கடுமையாக உணரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உக்ரைன் நெருக்கடி தொடர்பான கட்சிகளுடன் பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்கவும் – சீனாவின் கோரிக்கை.
ஈரான்-பாகிஸ்தான் கருத்து வேறுபாடுகளை பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க சீனா ஆதரவு.
அமெரிக்க அதிபர் தேர்தலில் இருந்து ரான் டிசாண்டிஸ் வெளியேறினார்.
அதிகாலை முடிவடைந்த 24 மணித்தியாலங்களில் 955 சந்தேக நபர்கள் கைது.