அசாம் மாநிலத்தில் யாத்திரை செல்லும் ராகுல் காந்தி மீது வழக்குப்பதிவு
அசாம் மாநிலத்துக்குள் யாத்திரை மேற்கொள்ள ராகுல் காந்திக்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருவது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. அவர் மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட்டது தான்தான் என அம்மாநில முதலமைச்சரே தெரிவித்திருப்பது சலசலப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
நாடாளுமன்றத் தேர்தல்ளுக்கு ஒரு சில மாதங்களே உள்ள நிலையில், காங்கிரஸ் கட்சியை மேலும் பலப்படுத்தும் வகையில் பாரத் ஜோடோ நியாய யாத்திரை என்ற பெயரில் ராகுல் காந்தி 2ஆவது கட்ட யாத்திரை மேற்கொண்டுள்ளார். அசாமில் படத்ராவா சத்ராவில் சாமி தரிசனம் செய்ய ராகுலுக்கு அனுமதி மறுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அத்துடன் யாத்திரையில் பங்குபெற்ற வாகனங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் புகார் எழுந்தது. இந்த நிலையில் அசாம் தலைநகர் கவுகாத்திக்குள் நுழையவும் ராகுல் காந்திக்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டு தடுத்து நிறுத்தப்பட்டார். இதனால் காவல்துறையினருக்கும் காங்கிரஸ் கட்சியினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
போக்குவரத்து நெரிசல் அபாயத்தைக் காரணம் காட்டியே அவர் தடுத்து நிறுத்தப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது. இதற்கிடையே அசாம் – மேகாலயா எல்லையில் பேருந்தின் கூரையில் நின்றபடி மேகாலயா தனியார் பல்கலைக்கழக மாணவர்கள் மத்தியில் ராகுல் காந்தி உரையாற்றினார். இந்த பரபரப்பான சூழல்களுக்கு மத்தியில், ராகுல் காந்தி மீது வழக்குப்பதிவு செய்ய டிஜிபிக்கு உத்தரவிட்டதே தான்தான் என அம்மாநில முதலமைச்சர் ஹிமந்த சர்மா தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளது இவ்விவகாரத்தில் மேலும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமைதி மாநிலமான அசாமில் மக்களை, ராகுல் காந்தி தூண்டிவிட்டதாகவும் அதனால் அவர் மீது வழக்குப்பதிவு செய்ய தான் அறிவுறுத்தியதாகவும் ஹிமந்த சர்மா தெரிவித்துள்ளார்.
மேலதிக செய்திகள்
வாக்கெடுப்புக்குப் பின் ஆன்லைன் மசோதா மீதான விவாதம் இன்று தொடங்கியது
சு.க. தலைமையில் புதிய கூட்டமைப்பு – மைத்திரி முக்கிய கலந்துரையாடல்.
சு.க. தலைமையில் புதிய கூட்டமைப்பு – மைத்திரி முக்கிய கலந்துரையாடல்.
முதலாம் வகுப்புக்கு மாணவர் சேர்க்கை குறித்த அறிவிப்பு…
பிக்குவை சுட்டுக் கொன்றவகள் தப்பித்து செல்லும் போது வாகனத்தை எரித்துள்ளனர்…
ஆனையிறவு பகுதியில் கோர விபத்து ஒருவர் உயிரிழப்பு..பலர் காயம்.
சீனாவின் ஜின்ஜியாங் மாகாணத்தில் 7.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.