யாழில் அதிகளவு போதை மருந்தை ஊசி மூலம் ஏற்றிய இளைஞர் உயிரிழப்பு!

யாழ்ப்பாணம், ஓட்டுமடம் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் அதிகளவு போதை மருந்தை ஊசி மூலம் ஏற்றியதால் உயிரிழந்துள்ளார்.
ஓட்டுமடம் பகுதியில் நேற்று திடீரென உயிரிழந்த 26 வயது இளைஞரின் மரணத்தில் ஏதும் மர்மம் உள்ளதா எனக் கண்டறிய இன்று உடற்கூறு ஆய்வு நடத்தப்பட்டது. இதன்போது ஊசி மூலம் அதிகளவு போதை மருந்து ஏற்றியமையே இளைஞரின் மரணத்துக்குக் காரணம் எனக் கண்டறியப்பட்டது.
அதேவேளை, உயிரிழந்த இளைஞரின் உடலில் போதை ஊசி மருந்து ஏற்றிய அடையாளமும் காணப்படுகின்றது.
இது தொடர்பான விசாரணையின்போது மேற்படி இளைஞர் போதை ஊசி பாவித்ததை வீட்டாரும் ஏற்றுக்கொண்டனர்.