வெளித் தோற்றத்தை வைத்து மனிதர்களைக் கணிக்காதீர்கள்: சனத் நிஷாந்த அதிகாலை இட்ட FB பதிவு : இறுதி வீடியோ
கொழும்பு – கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை 2 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த உயிரிழந்துள்ளார் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் விடுத்துள்ள அறிவித்தலில் தெரிவித்திருந்தது. இந்நிலையில், சனத் நிஷாந்த இன்று அதிகாலை 1.37 மணிக்கு தனது பேஸ்புக் கணக்கில் பதிவொன்றை இட்டுள்ளார்.
பேஸ்புக் பக்கம் ஒன்றினால் வெளியிடப்பட்ட வீடியோ காணொளி ஒன்றையே அவர் இவ்வாறு பகிர்ந்துள்ளார்.
“வெளித் தோற்றத்தைப் பார்த்து ஒருபோதும் மனிதர்களைக் கணிப்பிட வேண்டாம். இன்று சமூகத்தில் பெரும்பாலானோர் இதனையே செய்கின்றனர்.” – என்று அந்த வீடியோ பதிவு அமைந்துள்ளது.
கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையில் இடம்பெற்ற வாகன விபத்தில் உயிரிழந்த இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த நேற்று இரவு திருமண நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கொழும்பு நோக்கி சென்று கொண்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
சிலாபம் பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் நடைபெற்ற மருமகன் ஒருவரின் திருமண நிகழ்வில் கலந்து கொண்டிருந்தார்.
இந்நிகழ்வில் கலந்து கொண்டு கொழும்பு திரும்பிக் கொண்டிருந்த போதே விபத்து ஏற்பட்டுள்ளது.
அவரது இறுதி நேர்காணல் ஒன்று , சனத்தின் நண்பரது உடற் பயிற்சி நிலையத்தில் வைத்து எடுக்கப்பட்டிருந்தது. கடுமையான ஒருவராக வெளித் தோற்றத்துக்கு தெரிந்தாலும் , அவரது நண்பர்களோடு சாதாரண ஒரு மனிதரானாகவே வாழ்ந்துள்ளார்.
இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த உட்பட இருவர் நெடுஞ்சாலை விபத்தில் உயிரிழந்துள்ளனர்