கங்கையில் மூழ்கினால் கேன்சர் குணமாகும் – 5 வயது குழந்தையைக் கொன்ற பெற்றோர்!

5 வயது குழந்தையை நீரில் மூழ்கடித்து பெற்றோர் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லியைச் சேர்ந்த குடும்பம் ஒன்று உத்தரகாண்ட், ஹர் கி பெளரிக்கு வந்தனர். அவர்கள் தங்களது 5 வயது குழந்தைக்கு ரத்த புற்று நோய் இருந்ததால் கங்கை நீரில் மூழ்கி எடுத்தால் நோய் குணமாகும் என்ற நம்பிக்கையில் கொன்றுள்ளனர்.
இதுகுறித்த வீடியோ ஒன்று வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதில், பெண் ஒருவர், குழந்தையை நீண்ட நேரம் நீரில் மூழ்க வைக்கிறார். அங்கிருந்தவர்கள் அதனைக் கண்டிக்கின்றனர். அதற்கு அந்தப் பெண், இந்த குழந்தை எழுந்து நிற்கும்.
இது எனது வாக்குறுதி என கோபத்துடன் கூறுகிறார். தொடர்ந்து, குழந்தையை நீரில் மூழ்க வைக்கிறார். அதன்பின், அருகில் இருந்தவர்கள் ஓடிவந்து குழந்தையை மீட்டனர். அப்போது ஆவேசத்தில் அந்த நபரை பெண் தாக்குகிறார்.
இதற்கிடையில் அந்த குழந்தை மயக்கமடைந்தது. உடனே விரைந்து மருத்துவமனையில் அனுமதித்ததில் பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.
அதனையடுத்து, போலீஸார் வழக்குப்பதிவு செய்து பெற்றோரை விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.