ரயில்வே சிற்றுண்டிசாலைகளில் அவசர ஆய்வுகளை மேற்கொள்ள ஆய்வாளர்கள் முடிவு.
அண்மையில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையின் போது மீனகயா புகையிரதத்தின் சிற்றுண்டிச்சாலை அசுத்தமான முறையில் நடத்தப்படுவதை அவதானித்ததை அடுத்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை பொது பரிசோதகர்கள் சங்கத்தின் செயலாளர் ஷனக போபிட்டிய தெரிவித்துள்ளார்.
இதன்படி, நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் மீனகயா ரயிலின் சிற்றுண்டிச்சாலை பெட்டியை தற்காலிகமாக இடைநிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், மலையகப் பாதையில் ரயில் இயக்கம் வழமைக்கு திரும்பியுள்ளது.
நேற்றிரவு கடிகமுவ மற்றும் மேல் கோட்டே இடையே புகையிரதம் தடம் புரண்டமையினால் புகையிரத சேவையில் இடையூறு ஏற்பட்டுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது.