சனத் நிஷாந்தவின் சாரதிக்கு விளக்கமறியல் : சாரதி விபத்தை விபரித்த விதம்
சனத் நிஷாந்தவின் சாரதிக்கு விளக்கமறியல் : கொள்கலன் வாகனத்தின் சாரதிக்கு பிணை
“ விரைவாக கொழும்புக்கு வர வேண்டும் என்ற நோக்கத்தில் வந்தோம். அதற்குள் அமைச்சர் தூங்கிவிட்டார். நெடுஞ்சாலையில் எனக்கு முன்னால் இருந்த காரை முந்திச் சென்றேன். நான் ஜீப்பை மீண்டும் வலது பக்கம் உள்ள பாதையில் உள்ள டிரக்கில் செலுத்தி முந்திச் செல்ல முயன்றபோது, பின்னால் வந்த காரொன்று எம்மை முந்திச் சென்றது. நான் அதில் மோதாமல் இடப்பக்கமாக திருப்பியதும் , எனக்கு முன்னால் சென்று கொண்டிருந்த கன்டெய்னர் லொறி மீது கார் மோதியது. ஜீப் கட்டுப்பாட்டை இழந்து வேலியில் மோதி நின்றது.”
கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையில் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த மற்றும் அவரது பாதுகாப்பு உத்தியோகத்தர் உயிரிழந்த சம்பவத்தில் சொகுசு ஜீப் வண்டியை செலுத்திய சனத் நிஷாந்தவின் சாரதி விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
கொள்கலன் வாகனத்தின் (LY 1263) சாரதியை பிணையில் விடுவிக்க வெலிசர நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
சனத் நிஷாந்தவை பலிகொண்ட விபத்து பற்றி சாரதி வெளிப்படுத்திய கதை இதோ!
இராஜாங்க அமைச்சர் ‘சனத் நிஷாந்த’ ‘நெடுஞ்சாலை’யில் ஏற்பட்ட பயங்கர விபத்தில் உயிரிழந்ததுடன், அவரது ‘பாதுகாப்பு அதிகாரி’யும் விபத்தில் உயிரிழந்தார்.
இதேவேளை, ‘விபத்தின் பின்னர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு , தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ‘சாரதி’ பிரபாத் எரங்க தேசிய பத்திரிகையொன்றுக்கு விபத்து குறித்து பின்வரும் ‘உண்மைகளை’ வெளிப்படுத்தியிருந்தார்.
எங்கள் வாகனத்திற்கு முன்னால் ஒரு கண்டெய்னர் சென்று கொண்டிருந்தது. எங்களுடைய வாகனம் கண்டெய்னரைக் கடந்து செல்லவிருந்தபோது, வலதுபுறத்தில் இருந்து வேகமாக வந்த கார் அதை முந்திச் சென்றது. அந்த கார் மீது மோதாமல் இருக்க எங்கள் வாகனத்தை இடது பக்கம் திருப்பினேன். அதே சமயம் எங்கள் வாகனம் பலத்த சத்தத்துடன் கண்டெய்னர் மீது மோதியது. கார் சுழல்வது போல் இருந்தது. அடுத்து என்ன நடந்தது என்று என்னால் கற்பனை செய்து பார்க்க முடியவில்லை.
இந்த விபத்தில், ‘இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த’ பயணித்த ஜீப்பின் ‘முன் பகுதி’யும், இன்ஜின் அமைந்துள்ள வாகனத்தின் ‘இடது’ பகுதியும் குப்பைக் குவியல் போல மாறியுள்ளது.
சிதைந்த வாகனத்தில் சிக்கிய இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவை வெளியே எடுப்பதற்கு, பொலிஸாரும், நெடுஞ்சாலைத்துறையினரும் கடும் ‘முயற்சி’ எடுக்க நேரிட்டதாகக் கூறப்படுகிறது.
விபத்தின் போது ‘ஜீப்’ மணிக்கு 130 கி.மீ.க்கும் அதிகமான வேகத்தில் (130க்கு மேல் 160க்கு குறைவாக) பயணித்ததாகவும் தெரியவந்துள்ளது.
விபத்து நேரிட்ட போது, ’ இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த’ , தான் அமர்ந்திருந்த இருக்கையில் சாய்ந்து படுத்து தூங்கியதாகவும், போலீசாருக்கு தெரியவந்துள்ளது.
இந்த விபத்தில் அமைச்சரின் தலை மற்றும் வலது காலில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கடைசியாக , ஒரு அதிகாரியின் குடும்ப திருமண நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்ட அவர், தனது மனைவி மற்றும் குழந்தைகளை வேறொரு வாகனத்தில் இந் நிகழ்வின் பின் கொழும்புக்கு அனுப்பி வைத்து விட்டு , மீண்டும், சிலாபத்தில் ஒரு திருமண விழாவில் கலந்து கொண்டு, வரும் போதே இந்த ‘மோசமான விபத்தை’ சந்தித்தார்.
அவரது உறவினர் என்பதால், குடும்பத்தோடு போக வேண்டியதில்லை. நான் தனியாக போய் வருகிறேன் என , எங்களை அனுப்பி விட்டு, அவர் சிலாபத்தில் நடந்த திருமண நிகழ்வுக்கு சென்றார்.
(இது சனத் நிஷாந்தவின் மனைவி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் சொன்ன கதை….)
இதேவேளை, கட்டுநாயக்க நெடுஞ்சாலையில் இடம்பெற்ற கோர விபத்தில் உயிரிழந்த இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த, சில தினங்களுக்கு முன்னர் ஊடகவியலாளர்களுடன் இடம்பெற்ற சிநேகபூர்வ சந்திப்பில், “என் குறிப்பை பார்த்த ஜோதிடர் ஒருவர் ஒரு மோசமான காலம்” என சனத் கூறியதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்த செய்தியாளர் சந்திப்பு இரண்டு வாரங்களுக்கு முன்னர் கொழும்பில் இடம்பெற்றது.
அங்கு, இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த சிரித்துக்கொண்டே, குறிப்பு பார்க்கும் உறவினர் ஒருவர், “பொல்லால் , கல்லால் அடித்தாலும், உன்னை கொல்ல முடியாது” என்று கூறினார். “நான் இன்றும் உயிருடன் இருக்கிறேன்.” என இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த தெரிவித்துள்ளார்.
மேலும் அரசியலில் இருந்து தன்னை விலகுமாறு தனது குடும்பத்தினர் கேட்டுக் கொள்வதாகவும் அவர் கூறியுள்ளார்.
இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த சென்ற வாகனம் செல்வதை அவதானித்த ஒருவரது சாட்சியமாக , தனது வாகனத்தை முந்திச் சென்ற விதம் குறித்து தனது சமூக வலைத்தளத்தில் இப்படி பகிர்ந்திருந்தார்.
லைட் அடித்துக் கொண்டு வேகமாக பின்னால் வந்த ஒரு வாகனம் வெட்டு போட்டுக் கொண்டும் , ஹோர்ண் அடித்துக் கொண்டும் எனது வாகனத்தை வேகமாக கடந்து சென்றது. நான் போலீசாருக்கு போண் எடுத்து , இந்த வாகனத்தை அவதானியுங்கள் என சொல்லவும் நினைத்தேன். ஏதோ கொலை ஒன்றை செய்துவிட்டு தப்பிச் செல்வது போல அதி வேகமாக சென்றார்கள். இந்த வாகனம் அதிக தூரம் செல்லாது என நினைத்தேன். அதேபோல ஒரு 5 நிமிடம்தான் இருக்கும் , அந்த வாகனம் மோதி சுக்கு நூறாகி வீசுப்படுவதை கண்டேன். எப்படியும் மனிதர்கள்தானே என , எனது வாகனத்தை நிறுத்திவிட்டு உதவ ஓடினேன். அப்போதுதான் அமைச்சர் சனத் நிஷாந்த இருப்பதைக் கண்டேன். அவர் வேதனையில் முனுமுனுத்துக் கொண்டிருந்தார். அமைச்சர் கடும் தூக்கத்தில்தான் இருந்துள்ளார். இரத்தம் தெரியவில்லை. கழுத்து தொங்கிக் கொண்டிருந்தது. சீட் பெல்ட் போட்டிருந்த மாதிரி தெரியவில்லை. இந்த சம்பவம் நடந்து 10 நிமிடங்கள் அளவு தாமதமாகியே வைத்தியசாலைக்கு கொண்டு சென்றார்கள். அப்போதே அமைச்சர் இறந்திருக்கலாம் என நினைக்கிறேன்.
EYEWITNESS
சனத் நிஷாந்தவின் பூதவுடல் இன்று ஆராச்சிக்கட்டுக்கு…….
மேலும் செய்திகள்சனத் நிஷாந்தவின் சாரதிக்கு விளக்கமறியல் : சாரதி விபத்தை விபரித்த விதம்
ஜெய்ப்பூர் டீக்கடையை புகழ்ந்த பிரான்ஸ் அதிபர்!
மருத்துவக் காப்பீட்டில் எந்த மருத்துவமனையிலும் சிகிச்சை பெறும் வசதி
கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் இன்று இந்தியாவின் 75வது குடியரசு தினத்தை கொண்டாடியது.
ரயில்வே சிற்றுண்டிசாலைகளில் அவசர ஆய்வுகளை மேற்கொள்ள ஆய்வாளர்கள் முடிவு.
பயணத்தை முடித்துக் கொண்டு சொந்த நாட்டுக்கு சென்ற ஆஸ்திரியர் விபத்தில் உயிரிழந்தார்.