‘இறப்பு’ தொடர்பாக சமூக ஊடகங்களில் சனத் நிஷாந்தவின் சாரதியின் குறிப்பு : தொலைபேசி இரகசிய பொலிஸாரிடம்..
கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையில் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த மற்றும் அவரது மெய்ப்பாதுகாவலர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் காரை ஓட்டிச் சென்ற சாரதியின் கையடக்கத் தொலைபேசியை குற்றப் புலனாய்வு திணைக்களம் கைப்பற்றியுள்ளது.
விபத்து தொடர்பான விசாரணைக்காகவே விசேட பொலிஸ் குழுவினால் தொலைபேசி கைப்பற்றப்பட்டுள்ளது.
சாரதி எதிர்வரும் ஐந்தாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
விபத்து நடப்பதற்கு முந்தைய நாள் சாரதி ‘தனது இறப்பு’ தொடர்பாக சமூக ஊடகங்களில் வெளியிட்ட குறிப்பினால் தொலைபேசி, பொலிஸ் காவலில் எடுக்கப்பட்டுள்ளது.
தற்போது ராகம வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் சாரதியிடம் இரகசிய பொலிஸார் வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர்.
குறித்த சாரதி சமூக ஊடகங்களில் பதிவிட்ட குறிப்பு தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.
விபத்து ஏற்படுவதற்கு முன்னர் தனது மரணம் சம்பந்தமாக சமூக ஊடகங்களில் பதிவு செய்ததன் காரணமாக சாரதியின் கையடக்கத் தொலைபேசி எடுக்கப்பட்டதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தற்போது ராகம வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் சாரதியிடம் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாகவும் பொலிஸ் வட்டாரங்கள் வலியுறுத்தியுள்ளன.
More News
ஊடக அடக்குமுறைகளுக்கு எதிராக மாபெரும் கறுப்புப் பட்டிப் போராட்டம்.
இன்றும் கோர விபத்து! மூவர் பரிதாப மரணம்!!
தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளர் உள்ளிட்ட பதவிகளுக்கு இன்று இழுபறி!
சனத் நிஷாந்தவின் சாரதிக்கு விளக்கமறியல் : சாரதி விபத்தை விபரித்த விதம்