தமிழகம் உள்பட 23 மாநிலங்களுக்கு பாஜக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்!
விரைவில் நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில், பெரும்பான்மை இடங்களை கைப்பற்றி தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சியமைக்க பாஜக முனைப்பு காட்டி வருகிறது. அந்த வகையில், நாடு முழுவதும் தேர்தல் பணிகளில் பாஜக தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.
இந்நிலையில், தமிழகம் உள்பட 23 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு தேர்தல் பொறுப்பாளர்களை பாஜக தேசியத் தலைவர் ஜேபி நட்டா நியமித்துள்ளார்.
அந்த வகையில், எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில், தமிழகத்துக்கான பாஜக தேர்தல் பொறுப்பாளராக அக்கட்சியின் தேசியச் செயலாளர் அரவிந்த் மேனன் நியமிக்கப்பட்டுள்ளார்.
புதுச்சேரி பாஜக பொறுப்பாளராக உள்ள நிர்மலா குமார் சுரானா, அக்கட்சியின் தேர்தல் பொறுப்பையும் கூடுதலாக கவனிப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அண்டை மாநிலமான கேரளத்தின் தேர்தல் பொறுப்பாளராக பாஜக மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான பிரகாஷ் ஜவடேகர் நியமிக்கப்பட்டுள்ளார். கர்நாடக தேர்தல் பொறுப்பாளராக பாஜக தேசிய பொதுச் செயலாளருமான ராதா மோகன் தாஸ் அகர்வால் நியமிக்கப்பட்டுள்ளார்.
இமாச்சல பிரதேச தேர்தல் பொறுப்பாளராக ஸ்ரீகாந்த் சர்மா, கோவா தேர்தல் பொறுப்பாளராக ஆஷிஷ் சூட், மேற்கு வங்க பாஜக தேர்தல் பொறுப்பாளராக மங்கள் பாண்டே, உத்தரப்பிரதேச தேர்தல் பொறுப்பாளராக பாஜக தலைவர் பைஜயந்த் ஜெய் பாண்டா, பிகார் மாநில தேர்தல் பொறுப்பாளராக பாஜக தேசிய பொதுச் செயலாளர் வினோத் தாவ்டே ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபாணி, குஜராத் மற்றும் சண்டிகர் மாநிலங்களுக்கான பாஜக தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
மேலதிக செய்திகள்
சனத் நிஷாந்தவின் சாரதிக்கு விளக்கமறியல் : சாரதி விபத்தை விபரித்த விதம்
இந்திய மாணவா்களுக்கு ஏன் அரசியல் அவசியம்? ராகுல் காந்தி கருத்து
தேர்தலில் தனித்துப் போட்டியா, கூட்டணியா? பரபரக்கும் விஜய் அரசியல்
ஊடக அடக்குமுறைகளுக்கு எதிராக யாழ்ப்பாணத்தில் இன்று போராட்டம்.
தமிழகம் உள்பட 23 மாநிலங்களுக்கு பாஜக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்!
ஊடக அடக்குமுறைகளுக்கு எதிராக மாபெரும் கறுப்புப் பட்டிப் போராட்டம்.
இன்றும் கோர விபத்து! மூவர் பரிதாப மரணம்!!
மிகக் குறுகிய கால அவகாசத்தில் தமிழரசின் மத்திய குழு கூடுகின்றது இன்று!