விபத்தில் உயிரிழந்த சனத் நிஷாந்த விடைபெற்றார் (Video)

இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த ஆயிரக்கணக்கான மக்களின் கண்ணீர் மத்தியில் விடைபெற்றார்.
கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையில் இடம்பெற்ற வாகன விபத்தில் உயிரிழந்த இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் இறுதிக் கிரியைகள் இன்று ஆராச்சிக்கட்டுவ ராஜகதழுவ கத்தோலிக்க மயானத்தில் இடம்பெற்றது.
கடந்த இரண்டு நாட்களாக அவரது உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்த ஏராளமானோர் குவிந்தனர்.