சாந்தன், முருகன் உள்பட நால்வரை விடுவிக்க வேண்டும்: சீமான்
சிறப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டிருக்கும் ராஜீவ் காந்தி கொலை வழக்கு குற்றவாளிகள் சாந்தன், முருகன், ஜெயக்குமாா், ராபா்ட் பயஸ் ஆகியோரை சிறப்பு முகாமில் இருந்து உடனடியாக விடுவிக்க வேண்டும் என நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் வலியுறுத்தியுள்ளாா்.
இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள அறிக்கை: திருச்சி சிறப்பு முகாமில் நான்கு ஆண்டுகளுக்கு மேல் இருந்த ஈழ உறவான கிருஷ்ணமூா்த்தி மாரடைப்பால் மறைந்த செய்தி அதிா்ச்சி அளிக்கிறது.
சிறப்பு முகாம் எனும் பெயரில் சித்திரவதை கூடங்களில் அடைத்து வைத்திருப்பதன் விளைவாக, அங்குள்ள சொந்தங்களுக்கு உடல்நலக்குறைவு ஏற்படுகிறது. கிருஷ்ணமூா்த்தி இதய நோயால் பாதிக்கப்பட்டு, மருந்துகளை எடுத்து வந்த நிலையில் அவை தீா்ந்துபோய் அதிகாரிகளிடம் முறையிட்டும் அவை கிடைக்கப் பெறவில்லை.
இந்நிலையிலேயே, மாரடைப்பு ஏற்பட்டு அவா் உயிரிழந்திருக்கிறாா். அதிகாரிகளின் அலட்சியமும், அரசின் மெத்தனப்போக்குமே இதற்கு காரணம்.
ஏற்கனவே, சாந்தன் பெரும் உடல்நலக்குறைபாடு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கும் நிலையில், ராபா்ட் பயஸ், ஜெயக்குமாா் ஆகியோா் உடல் நலிவடைந்துள்ளனா்.
எனவே, முருகன், சாந்தன், ராபா்ட் பயாஸ், ஜெயக்குமாா் ஆகியோரை உடனடியாக விடுவித்து, மாற்று இடத்தில் தங்கவைக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா் அவா்.
மேலதிக செய்திகள்
உளுந்தூர்பேட்டை அருகே அடுத்தடுத்து விபத்து – 2 பெண்கள் பலி; 50 பேர் காயம்!
பாஜக ஆதரவுடன் நிதீஷ் மீண்டும் முதல்வா்: ‘இந்தியா’ கூட்டணிக்கு மேலும் பின்னடைவு