ரூ.36 லட்சம் ரொக்கம், சொகுசு கார்…: ஜார்க்கண்ட் முதல்வர் வீட்டில் பறிமுதல்
நில மோசடி வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரனின் தில்லி வீட்டில் சோதனை மேற்கொண்ட அமலாக்கத்துறையினர் பறிமுதல் செய்த ரொக்கம் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.
ரூ.36 லட்சம் ரொக்கம், பிஎம்டபிள்யூ சொகுசு கார் மற்றும் முறையற்ற ஆவணங்கள் அவரது வீட்டில் இருந்து பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி தலைவர் ஹேமந்த் சோரனிடம் தில்லி வீட்டில் வைத்தே விசாரணை மேற்கொள்ளப்பட்டது. திங்கள்கிழமை தொடங்கிய இந்த விசாரணை 13 மணி நேரம் நீடித்தது.
பிஎம்டபிள்யூ கார் சோரன் பினாமி பெயரில் வாங்கியதாக தெரிகிறது. 48 வயதான சோரன் தான் பதவியிருந்து விலகுவதாக அமலாக்கத்துறை அதிகாரிகள் முன்னிலையில் தெரிவித்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில் மாநிலத்தின் அரசியல் சூழல் குறித்து விவாதிக்க ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவின் சட்டமன்ற உறுப்பினர்கள் மாநில தலைநகரை விட்டு வெளியேற வேண்டாம் எனக் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
மேலதிக செய்திகள்
சமூக ஊடக ஆர்வலர் பியத் நிகேஷல , புலனாய்வுப் பிரிவினரால் கைது.
சோமாலிய கடற்கொள்ளையர்களிடம் இருந்து இலங்கை மீனவர்கள் மீட்கப்பட்டனர்.
ஜனாதிபதி பல்கலைக்கழகத்துக்குள் நுழையக் கூடாது : மாணவர் ஒன்றிய போராட்டம்
கழுத்தறுப்புகளை தாண்டி நடந்த குவாதமாலா தேர்தல் வெற்றி : சண் தவராஜா (Video)