சனத் நிஷாந்தவின் மரணத்திற்கு வந்த மக்களை கண்டு ரணில் அச்சம்: மொட்டு கட்சிக்குள் பிணக்கை ஏற்படுத்தியது ரணில் : மொட்டு கட்சியினர் குற்றச்சாட்டு.
ஷசீந்திர ராஜபக்சவிடம் இருந்து லொஹான் ரத்வத்தையை காப்பாற்றி, சசீந்திரவுக்கும் தெரியாமல் லோகனுக்கு அமைச்சு கொடுக்கப்பட்டுள்ளது எனவும் , சனத் நிஷாந்தவின் மரணத்திற்கு திரண்ட, மக்களைக் கண்டு ஜனாதிபதி கலங்கத்தில் இருப்பதாகவும் மொட்டு கட்சியினர் தெரிவித்துள்ளனர்.
ஷசீந்திர ராஜபக்சவின் கீழ் இருந்த அமைச்சு பதவிகளிலிருந்து ஷசீந்திரவை நீக்கிவிட்டு, லொஹான் ரத்வத்தைக்கு அந்த அமைச்சுகளை வழங்கும் வரை , அந்த பதவியில் இருந்து தான் அகற்றப்படுவார் என ஷசீந்திர ராஜபக்ஷவே அறிந்திருக்கவில்லை என பொதுஜன ஐக்கிய பெரமுனவின் அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் இறுதிக் கிரியைக்கு வருகை தந்த பெருந்தொகையான மக்களைக் கண்டு ஜனாதிபதி ரணில் உட்பட பலர் கவலையடைந்துள்ளதாக பொஹொட்டுவ கட்சி மேலும் தெரிவித்துள்ளது.
சனத் நிஷாந்தவின் மரணத்திற்குப் பின்னரான சூழ்நிலையில் பொஹொட்டுவ வாக்காளர் தளம் வலுப்பெற்றுள்ளதாக பொஹொட்டுவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ராஜபக்சவினருக்கு இடையே பிரிவினையை உருவாக்க ஜனாதிபதி , ஷசீந்திர ராஜபக்சவை, அமைச்சர் பதவியிலிருந்து நீக்கியுள்ளதாக பொஹொட்டுவ தொடர்பான வட்டாரங்கள் குற்றம் சாட்டியுள்ளன.
இதன் மூலம் ராஜபக்சவினருக்கும், ரத்வத்தேவினருக்கும் இடையில் மோதலை உருவாக்கி , பொஹொட்டுவவின் ஒற்றுமையை உடைக்க முயற்சித்துள்ளதாக பொஹொட்டுவ கருதுவதாகவும் கூறப்படுகிறது.
More News
பாஜக பிரமுகர் கொலை: கேரளத்தில் 15 பேருக்கு தூக்குத் தண்டனை!
குடும்ப ஓய்வூதியத்துக்கு கணவருக்கு பதிலாக குழந்தைகளின் பெயா்: மத்திய அரசு அனுமதி
‘நாட்டிற்கு ‘ஒரு சவால்’ வரும்போது தூங்குவதில்லை’: சென்னை மாணவா் கேள்விக்கு மோடி பதில்
ரூ.36 லட்சம் ரொக்கம், சொகுசு கார்…: ஜார்க்கண்ட் முதல்வர் வீட்டில் பறிமுதல்
கழுத்தறுப்புகளை தாண்டி நடந்த குவாதமாலா தேர்தல் வெற்றி : சண் தவராஜா (Video)