கொழும்பு பல்கலைக்கழக பேராசிரியரிடமிருந்து, இளமையாக மாற ஒரு மருந்து: உற்பத்தி இறுதி கட்டத்தில்……
முதுமையை குறைக்கும் இயற்கை மருந்து ஒன்று தயாரிக்கப்படுவதாக கொழும்பு பல்கலைக்கழகத்தின் உயிர்வேதியியல், மூலக்கூறு உயிரியல் மற்றும் உயிரி தொழில்நுட்ப நிறுவன விஞ்ஞானி பேராசிரியர் சமிர ஆர். சமரகோன் தெரிவித்துள்ளார்.
மருந்து உற்பத்தி தொண்ணூறு சதவீதம் நிறைவடைந்துள்ளது என தெரிவித்த அவர் , தேவையான அனுமதிகள் போன்றவற்றை பெற்று விரைவில் மக்களிடம் கையளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த மருந்து இயற்கை மூலிகை பொருட்களிலிருந்து தயாரிக்கப்படுகிறது.
மருந்தின் செயல்பாடு வயதானதைத் தாமதப்படுத்துவது அல்லது ஒருவரின் எண் வயதை விட இளமையாக தோற்றமளிப்பதாகும்.
இந்த மருந்தை தயாரித்து பரிசோதிக்க தனது குழுவிற்கு 04 வருடங்களுக்கு மேல் ஆனது என்றும் பேராசிரியர் சமீரா ஆர். சமரகோன் மேலும் குறிப்பிட்டார்.
மேலும் ஏற்கனவே அவர் புற்றுநோயைக் கொல்லும் ஊட்டச்சத்து மருந்து ஒன்றையும் தயாரித்துள்ளார்.
12 ஆண்டுகளுக்கும் மேலாக உள்ளூர் தாவரங்கள் மற்றும் தாவர சாறுகளைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்ட இந்த ஆராய்ச்சி தற்போது வெற்றிகரமான முடிவுகளைக் காட்டுகிறது. இந்த புதிய ஊட்டச்சத்து மருந்து மனித உடலில் ஆசனவாய், நுரையீரல் மற்றும் மார்பகங்கள் உட்பட எங்கும் வளரும் அசாதாரண புற்றுநோய் செல்களை அழிக்கும் திறன் கொண்டது என அவர் தெரிவித்திருந்தார்.
More News
பாஜக பிரமுகர் கொலை: கேரளத்தில் 15 பேருக்கு தூக்குத் தண்டனை!
குடும்ப ஓய்வூதியத்துக்கு கணவருக்கு பதிலாக குழந்தைகளின் பெயா்: மத்திய அரசு அனுமதி
‘நாட்டிற்கு ‘ஒரு சவால்’ வரும்போது தூங்குவதில்லை’: சென்னை மாணவா் கேள்விக்கு மோடி பதில்
ரூ.36 லட்சம் ரொக்கம், சொகுசு கார்…: ஜார்க்கண்ட் முதல்வர் வீட்டில் பறிமுதல்
கழுத்தறுப்புகளை தாண்டி நடந்த குவாதமாலா தேர்தல் வெற்றி : சண் தவராஜா (Video)