போராட்டக் கள கண்ணீர்ப்புகைக்குள் தொண்டர்களுடன் நின்ற எதிர்க்கட்சித் தலைவர் சஜித் ! (வீடியோ)
ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதித் தேர்தல் பிரச்சாரத்தை “மாற்றத்தை உருவாக்கும் ஒரு வருடம்” என்ற தொனிப்பொருளில் இன்று (30) கொழும்பில் ஆரம்பிக்க கட்சி நடவடிக்கை எடுத்திருந்தது.
அதன்படி இன்று (30) கொழும்பில் பாரிய பேரணியொன்று நடைபெறவுள்ளதாக ஐக்கிய மக்கள் படை தெரிவித்திருந்தது.
பொருளாதார அழுத்தத்தை குறைத்து மக்கள் சுதந்திரமாக வாழ விடுமாறு அரசாங்கத்தை வலியுறுத்தி இந்த போராட்டம் நடத்தப்படவுள்ளதாக நேற்று (29) எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் ஐக்கிய மக்கள் சக்தியின் செயலாளர் நாயகம் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார்.
பொலிஸாரின் தொடர்ச்சியான கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாக்குதல்களுக்கு மத்தியிலும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தனது கட்சி உறுப்பினர்களுடன் நின்றுகொண்டிருந்ததைக் காணமுடிந்தது.
எதிர்க்கட்சித் தலைவரும் கட்சி உறுப்பினர்களிடம் உரையாற்றி சிறு அறிக்கையொன்றையும் விடுத்தார்.
பாதுகாப்புப் படையினரின் கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாக்குதலினால் காயமடைந்தவர்களை பார்ப்பதற்காக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (30) பிற்பகல் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு விஜயம் செய்தார்.