முதன்முறையாக நோயாளியின் மூளையில் சிப் அல்லது எலக்ட்ரானிக் சர்க்யூட் பொருத்தல்.
முதன்முறையாக ஒரு நோயாளியின் மூளையில் சிப் அல்லது எலக்ட்ரானிக் சர்க்யூட் பொருத்தப்பட்டதாக அமெரிக்க கோடீஸ்வர தொழிலதிபர் எலோன் மஸ்க் கூறுகிறார்.
இந்த உள்வைப்பு மூலம் மூளையை எந்த மின்னணு சாதனத்துடனும் இணைக்க முடியும் என்று எலோன் மஸ்க் கூறுகிறார்.
இதனால் தொலைபேசி அல்லது கணினி ஊடாக எந்தவொரு சாதனத்தையும் சிந்திப்பதன் மூலம் கட்டுப்படுத்த முடியும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கடந்த ஆண்டு அமெரிக்க சுகாதார அதிகாரிகளால் அங்கீகரிக்கப்பட்ட இந்த பரிசோதனையின் முதன்மை நோக்கம் முடமான நோயாளிகளுக்கு உதவுவதாகவும் எலோன் மஸ்க் கூறியுள்ளார்.