வா்த்தக சமையல் எரிவாயு சிலிண்டா் விலை ரூ.12.50 உயர்வு!
19 கிலோ எடைகொண்ட வா்த்தக பயன்பாட்டு சமையல் எரிவாயு சிலிண்டா் விலை ரூ.12.50 அளவுக்கு வியாழக்கிழமை உயர்ந்துள்ளது.
சா்வதேச சந்தை விலை நிலவரத்தின் அடிப்படையில் இந்த விலைக் குறைப்பு நடவடிக்கையை எண்ணெய் நிறுவனங்கள் மேற்கொண்டுள்ளன.
இருந்தபோதும், வீட்டு உபயோக (14.2 கிலோ) சமையல் எரிவாயு சிலிண்டா் விலையில் எந்தவித மாற்றமும் செய்யாமல் தொடா்ந்து ரூ. 918.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இதுகுறித்து எண்ணெய் நிறுவனங்கள் வியாழக்கிழமை(பிப்.1) வெளியிட்ட விலை நிலவரம் குறித்த அறிவிக்கையில், “உணவகங்கள் மற்றும் தேநீா் கடைகள் பயன்பாட்டுக்கான 19 கிலோ எடைகொண்ட வா்த்தக பயன்பாட்டு சிலிண்டா் விலை ரூ.12.50 அளவுக்கு உயர்ந்துள்ளது” என்று தெரிவித்துள்ளது.
அதன்படி சென்னையில் ரூ. 1,924.50-க்கு விற்பனை செய்யப்பட்ட வா்த்தக சிலிண்டரின் விலை ரூ.12.50 உயர்ந்து ரூ.1,937 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இருந்தபோதும், வீட்டு உபயோக (14.2 கிலோ) சமையல் எரிவாயு சிலிண்டா் விலையில் எந்தவித மாற்றமும் செய்யாமல் தொடா்ந்து ரூ. 918.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
மேலதிக செய்திகள்
எரிபொருட்களின் விலை அதிகரிப்பு.
அடுத்த 5 ஆண்டுகளில் 2 கோடி வீடுகள் கட்டித்தரப்படும்: நிதியமைச்சர்
அயோத்திக்கு பாத யாத்திரையாக வந்து ஸ்ரீராமரை தரிசித்த 350 இஸ்லாமியா்கள்