ஈரானிய இலக்குகள் மீதான தொடர் தாக்குதல்களுக்கு அமெரிக்கா திட்டமிட்டு வருகிறது.
சிரியா மற்றும் ஈராக்கில் உள்ள ஈரானிய இலக்குகள் மீதான தொடர் தாக்குதல்களுக்கான திட்டங்களுக்கு அமெரிக்கா ஒப்புதல் அளித்துள்ளது.
ஜோர்டானில் உள்ள சிரிய எல்லைக்கு அருகிலுள்ள பகுதியில் ட்ரோன் தாக்குதலில் மூன்று அமெரிக்க வீரர்கள் கொல்லப்பட்டதை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
ட்ரோன் தாக்குதலை நடத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட ஈரானிய ஆதரவு போராளிகள் ஈராக்கிய இஸ்லாமிய எதிர்ப்பு மற்றும் ஈரானின் புரட்சிகர காவலர்களால் பயிற்சி மற்றும் உதவி பெற்றவர்கள் என்பது தெரியவந்துள்ளது.
இதற்கிடையில், டவர் 22 என்று அழைக்கப்படும் இராணுவ தளத்தில் மேலும் 41 அமெரிக்க வீரர்கள் காயமடைந்த தாக்குதலுக்கும் தங்களுக்கும் தொடர்பில்லை என்று ஈரான் மறுத்துள்ளது.
ஜோர்டான் தாக்குதலில் உயிரிழந்த மூன்று அமெரிக்க வீரர்களின் உடல்கள் இன்று டெலாவேர் விமானப்படை தளத்திற்கு கொண்டு வரப்பட உள்ளதாகவும், அதில் அதிபர் ஜோ பிடன் பங்கேற்பார் என்றும் வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.