சண்டிலிப்பாய் இந்துவை சரித்து அரையிறுதிக்குள் புத்தூர் கலைமதி.

பரபரப்பான ஆட்டத்தின் மத்தியில் சண்டிலிப்பாய் இந்துவை சரித்து அரையிறுதிக்குள் புத்தூர் கலைமதி.
அமரர் சிவகுருநாதர் ஞாபாகர்த்த சுற்றின் 2வது காலிறுதி ஆட்டத்தில் புத்தூர் கலைமதி எதிர் சண்டிலிப்பாய் இந்து மோதின. இதில் முதற்சுற்றினை கலைமதி வென்றிட, பதிலுக்கு இரண்டாம் சுற்றினை சண்டிலிப்பாய் தனவசபடுத்தியதனையடுத்து ஆட்டம் சூடுபிடித்தது! தொடர்ந்து 3வது சுற்றினை மீண்டும் கலைமதி தனதாக்க ஆட்டம் பரபரப்பின் உச்சம்கண்டது! இதனையடுத்து ஆரம்பமான 4ம் சுற்றில் கடும் போரட்டத்தின் மத்தியில் சண்டிலிப்பாயை கலைமதி வீழ்த்திட 3:1 என்ற புள்ளியடிப்படையில் கலைமதி வெற்றியடைந்தது.