அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல கைது!
முன்னாள் சுகாதார அமைச்சரும் தற்போதைய சுற்றாடல் துறை அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினரால் இன்று இரவு கைது செய்யப்பட்டுள்ளார்.
சர்ச்சைக்குரிய தரமற்ற மருந்துகள் இறக்குமதி செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் அவரிடம் பல மணிநேரம் விசாரணை நடத்திய பின்னரே கைது இடம்பெற்றுள்ளது.
மேற்படி விடயம் தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம் வாக்குமூலம் வழங்குமாறு அமைச்சர் கெஹலிய ரம்புக்வெலவுக்குக் கொழும்பு, மாளிகாகந்தை நீதிவான் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டிருந்தது. அத்துடன், அவருக்கு வெளிநாட்டுப் பயணத் தடையும் விதிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், வாக்குமூலம் வழங்குவதற்காக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல இன்று காலை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்கு வந்திருந்தார். பல மணிநேர விசாரணையின் பின்னர் அவர் இன்று இரவு கைது செய்யப்பட்டுள்ளார்.
முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் இன்று (02) கைது செய்யப்பட்டார்.
மாளிகாவத்தை நீதிமன்றம் வழங்கிய உத்தரவின் பிரகாரம் பிரபல்யமான இம்யூனோகுளோபுலின் கிரிமினல் கொடுக்கல் வாங்கல் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக வராமல் அவர் குற்றப் புலனாய்வு திணைக்களத்தை தொடர்ந்து தவிர்த்து வந்த நிலையில் இன்று குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு வந்த போது கைது செய்யப்பட்டார்.
இன்று காலை 09.00 மணியளவில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு வந்த முன்னாள் சுகாதார அமைச்சரிடம் 9 மணித்தியாலங்கள் விசாரணை செய்து வாக்குமூலங்களைப் பதிவு செய்த பின்னர் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் அவரைக் கைது செய்தனர்.
இந்த சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக எதிர்வரும் 31ஆம் திகதி குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் ஆஜராகுமாறு சட்டமா அதிபர் கெஹெலியிடம் தெரிவித்திருந்தார்.
ஆனால் அவர் குற்றப் புலனாய்வுப் பிரிவில் ஆஜராகவில்லை. சட்டமா அதிபர் திணைக்களம் சார்பில் ஆஜரான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் லக்மினி கிரிஹாகம, இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட கெஹலிய ரம்புக்வெல்லவை குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு சென்று வழங்குமாறு சட்டமா அதிபர் உத்தரவு பிறப்பித்துள்ளதாகவும் , நேற்று முன்தினம் (31ம் தேதி) ஒரு அறிக்கையில், அந்த வாய்ப்பை அவர் வேண்டுமென்றே தவறவிட்டார் எனநீதிமன்றில் தெரிவித்தார்.
31ஆம் திகதி காலை 9.00 மணிக்கு மேல் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றுக்காக ஆஜராக வேண்டியிருப்பதால், நீதிமன்ற நடவடிக்கைகளின் பின்னர், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்குச் சென்று அன்றைய தினம் பிற்பகல் வாக்குமூலம் வழங்கவுள்ளதாகவும் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்த போதிலும் 31ஆம் திகதி மாலை இடம்பெற்ற விசேட சந்திப்பில் கலந்துகொள்ள உள்ளதால் , கலந்துகொள்ள முடியாது என எழுத்துமூலம் அறிவித்திருந்தார். ஆனாலும் 31ஆம் திகதி மாலை இடம்பெற்ற விசேட சந்திப்பில் அவர் கலந்துகொள்ளவில்லை ஜனாதிபதியின் செயலாளர் எவ்வாறு எழுத்துமூலம் அறிவித்துள்ளார் என பிரதி சொலிசிட்டர் ஜெனரல் தெரிவித்தார்.
இதன்படி, அமைச்சரை இன்று காலை 09 மணிக்கு நீதிமன்றில் முன்னிலையாகுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.
சட்டம் அனைவருக்கும் சமம் என்றும், இம்யூனோகுளோபுலின் குற்றம் தொடர்பாக அமைச்சரை கைது செய்து சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரி நாட்டில் போராட்டங்கள் நடந்தன.
More News
More News
சுதந்திர தின எதிர்ப்புப் போராட்டத்துக்கு வலுச்சேர்ப்போம்! – சிறீதரன் எம்.பி. அழைப்பு.
சுதந்திர தின எதிர்ப்புப் போராட்டத்துக்கு வலுச்சேர்ப்போம்! – சிறீதரன் எம்.பி. அழைப்பு.
பெலியத்த ஐவர் கொலைக்கு மூளையாக செயல்பட்டவர் முன்னாள் IP : அடுத்தவர் ஓய்வுபெற்ற கடற்படை வீரர்
யாழ்.சிறைச்சாலையிலிந்து வெளிவந்து 3 நாட்களில் உயிரிழந்த இளைஞன் : மரணத்தில் சந்தேகம்
பொன்சேகா பொறுப்புடன் செயற்பட வேண்டும்! – சஜித்தின் கட்சி எச்சரிக்கை.