சுதந்திர தினத்தை முன்னிட்டு 600 கைதிகள் விடுதலை!

இலங்கையின் 76 ஆவது தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு, ஜனாதிபதியின் விசேட பொது மன்னிப்பின் கீழ் 600 கைதிகள் விடுதலை செய்யப்படவுள்ளனர்.
அதன்படி, நாடளாவிய ரீதியில் சிறையில் உள்ள 600 கைதிகள் நாளை விடுதலை செய்யப்படவுள்ளனர் என்று சிறைச்சாலைகள் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.
அரசமைப்பின் 34 ஆவது பிரிவின் மூலம் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின்படி, இந்தப் பொது மன்னிப்பு வழங்கப்படுகின்றது.