சாந்தன் இலங்கை வர சிறீதரன், மனோ கூட்டாகக் கோரிக்கை : பரிசீலிப்பதாக ரணில் உறுதி
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை இன்று நண்பகல் நேரில் சந்தித்த இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் ஆகியோர், ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலை பெற்றுள்ள சாந்தனை இலங்கை வர அனுமதிக்குமாறு கோரினார்கள்.
இந்தக் கோரிக்கையைச் சாதகமாகப் பரிசீலித்து, சாந்தன் இலங்கை வந்து தன் வயதான தாயாரைச் சந்திக்கும் வாய்ப்பை ஏற்படுத்தித் தருவதாக ஜனாதிபதி உறுதியளித்துள்ளார்.
இது தொடர்பான அடுத்தகட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு தேசிய பாதுகாப்புக்கான ஜனாதிபதி ஆலோசகர் சாகல ரத்னாயக்கவுக்கு, சந்திப்பின்போதே ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார்.
சாந்தனின் தாயாரின் கோரிக்கைக் கடிதம் மற்றும் மேலதிக தகவல்களைத் தருமாறும் சிறீதரன் எம்.பியிடம் ஜாபதிபதி கோரியுள்ளார்.
more news
இளைஞர் கடத்தப்பட்டு காட்டில் வைத்து தாக்குதல் – சந்தேகநபர் ஒருவர் கைது.
சைக்கிளில் சென்ற நபர் கீழே வீழ்ந்து கழுத்து முறிந்து சாவு!
ஜனாதிபதி வேட்பாளர் யார்? பஸிலின் வருகைக்காக காத்திருக்கும் ‘மொட்டு’.
கிளிநொச்சியில் விபத்தில் சிக்கிய இளைஞர் மரணம்!
இளம் குடும்பஸ்தர் ஒருவர் வாளால் வெட்டிக்கொலை!
யாழில் விபத்தில் காயமடைந்தவர் நிமோனியா காய்ச்சலால் மரணம்!
சுதந்திர தினத்தை முன்னிட்டு 600 கைதிகள் விடுதலை!