கிளிநொச்சியில் விபத்தில் சிக்கிய இளைஞர் மரணம்!

கிளிநொச்சி, உமையாள்புரத்தில் ஹைஏஸ் – பஸ் விபத்தில் சிக்கி, அந்த வீதியால் மாடுகளை நடத்திக் கொண்டு சென்ற இளைஞர் படுகாயமடைந்து யாழ். போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
கோபாலசிங்கம் சதீஸ்குமார் (வயது – 25) என்ற மேற்படி இளைஞரே நேற்றுமுன்தினம் உயிரிழந்துள்ளார்.
இறப்பு விசாரணைகளை யாழ். போதனா மருத்துவமனை திடீர் இறப்பு விசாரணை அதிகாரி ந.பிறேம்குமார் மேற்கொண்டார்.