15 கோடி தங்கத்துடன் தலைமன்னாரிலிருந்து இருந்து இந்தியா சென்ற கடத்தல்காரர் கைது.
நேற்று (3) தலைமன்னாரிலிருந்து இந்தியாவுக்குக் கொண்டுசெல்லப்பட்ட சுமார் 15 கோடி ரூபா பெறுமதியான 4.634 கிலோ கிராம் தங்க பிஸ்கட்டுகளுடன் இந்தியாவின் திருச்சி சுங்கப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் குழுவினால் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மன்னாரை வசிப்பிடமாகவும், தற்போது இந்தியாவின் இராமநாதபுரம் பகுதியை தற்காலிகமாக வசிப்பிடமாகவும் கொண்ட சந்தேகநபர், 916 தங்க பிஸ்கட்டுகள் மற்றும் தங்கத் துண்டுகளை சாக்குகளில் பேக் செய்திருந்துதாக திருச்சி சுங்க அதிகாரிகள் இந்திய ஊடகங்களுக்கு தெரிவித்தனர்.
தலைமன்னாரில் இருந்து சட்டவிரோதமான முறையில் தங்கத்தை இந்தியாவுக்கு கொண்டு சென்ற சந்தேகநபர், அவர் சென்ற படகை இந்தியாவிற்கு தனியாகவே ஓட்டிச் சென்றதாக தமக்கு தகவல் கிடைத்துள்ளதாக திருச்சி சுங்க அதிகாரி தெரிவித்தனர்.
இந்த தங்கத்தை ஏற்றிக்கொண்டு படகில் திருச்சி பாம்பன் துறைமுகத்திற்கு கொண்டு செல்லும்போது, மற்றொருவர் மோட்டார் சைக்கிளில் அவரை சந்திக்க வந்துள்ளதோடு, சுங்கத்துறை அதிகாரிகளை கண்டவுடன் , அவர் மோட்டார் சைக்கிளை விட்டு தப்பிச் சென்றுள்ளார், மோட்டார் சைக்கிளையும் சுங்க அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.
More News
இளைஞர் கடத்தப்பட்டு காட்டில் வைத்து தாக்குதல் – சந்தேகநபர் ஒருவர் கைது.
திடீரென சரிந்து விழுந்த 3 அடுக்கு மாடிக்கட்டிடம்… இரவில் நடந்த அதிர்ச்சி சம்பவம்!
புதிய அரசியல் கட்சி தொடக்கம் -வாழ்த்தியவர்களுக்கு நன்றி தெரிவித்த நடிகர் விஜய்!
5 முறை சம்மன் அனுப்பியும் ஆஜராகாத கெஜ்ரிவால் – நீதிமன்றத்தை நாடிய அமலாக்கத்துறை!
சரியத் தொடங்கிய மேட்டூர் அணை நீர்மட்டம்: குடிநீர் தட்டுப்பாடு அபாயம்?
ஜனாதிபதி தலைமையில் இன்று சுதந்திர தினக் கொண்டாட்டம்!
யாழில் சுதந்திர தின எதிர்ப்புப் போராட்டங்களுக்குத் தடையுத்தரவு கோரும் மனு நிராகரிப்பு!
குடலில் கிருமித் தொற்றால் இளம் தாய் பரிதாப மரணம்.
குடலில் கிருமித் தொற்றால் இளம் தாய் பரிதாப மரணம்.
மூளை நரம்பு வெடித்து மன்னார் இளைஞர் சாவு – ஐஸ் போதைப்பொருள் பயன்பாடே காரணம்.
மூளை நரம்பு வெடித்து மன்னார் இளைஞர் சாவு – ஐஸ் போதைப்பொருள் பயன்பாடே காரணம்.