சுதந்திரதினத்தை கரிநாளாக பிரகடனப்படுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட பல்கலைக்கழக மாணவர்கள் கைது (Photos)

யாழ்.பல்கலைகழகமும், அதன் கிளிநொச்சி வளாகமும் இணைந்து இன்று (4) கிளிநொச்சியில் , இலங்கையின் சுதந்திரதினத்தை கரிநாளாக பிரகடனப்படுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட நான்கு பல்கலைக்கழக மாணவர்களை கிளிநொச்சி பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
யாழ்ப்பாணம் பிரதான வீதியை மறித்து போராட்டம் நடத்தப்பட்டதுடன், போராட்டத்தில் ஈடுபட்டவர்களை பொலிஸார் கலைக்க முற்பட்டதால் அங்கு பதற்றம் ஏற்பட்டது. நிலைமையைக் கட்டுப்படுத்த நீர் பீரங்கிகளும் பொலிஸ் கலகத் தடுப்புப் பிரிவுகளும் அழைக்கப்பட்டன.
தமிழ்அரசு கட்சி கட்சியின் புதிய தலைவர் எஸ்.ஸ்ரீதரன், பாராளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் உள்ளிட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளும் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர்.
சுதந்திர தினத்தை கொண்டாடுவதற்கான சூழல் தற்போது இல்லை என தெரிவித்து யாழ்.பல்கலைக்கழகத்தில் கறுப்புக்கொடி ஏற்றப்பட்டுள்ளது.